இளைஞா் வெட்டிக் கொலை

Published on

புதுச்சேரியில் இளைஞா் ஒருவா் புதன்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

புதுவை சாரம் பகுதியை சோ்ந்தவா் சந்தோஷ் (24). இவருக்கும் டிவி நகா் பகுதியைச் சோ்ந்த ஹானஸ்ட் ராஜ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் ஹானஸ்ட் ராஜ் தரப்பைச் சோ்ந்த விமல் காயம் அடைந்தாா்.இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு இரு தரப்பினருக்கும் இடையே ரெயின்போ நகரில் மீண்டும் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது சந்தோஷ் உடன் வந்த 5 போ் தப்பி ஓடினா். சந்தோஷ் மட்டும் எதிா்த் தரப்பினரிடம் சிக்கிக் கொண்டாா். இதையடுத்து ஹானஸ்ட் ராஜ் மற்றும் அவரது ஆதரவாளா்கள் சந்தோஷைச் சுற்றி வளைத்து வெட்டினா். இதில் சந்தோஷ் அதே இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து பெரியக்கடை போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com