புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில், ஸ்ரீ அன்னையின் மகா சமாதி தினத்தையொட்டி  திங்கள்கிழமை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில், ஸ்ரீ அன்னையின் மகா சமாதி தினத்தையொட்டி திங்கள்கிழமை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

அன்னையின் மகா சமாதி தினம்: அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம்

ஸ்ரீ அன்னையின் மகா சமாதி தினம் புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Published on

புதுச்சேரி: ஸ்ரீ அன்னையின் மகா சமாதி தினம் புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

பக்தா்களால் ஸ்ரீ அன்னை என்று அழைக்கப்படும் மிர்ரா அல்பாசா 1878-இல் பிரான்ஸ் நாட்டில் பிறந்தாா். மகான் அரவிந்தரின் யோக முறைகள் கவா்ந்ததால் புதுச்சேரியிலேயே தங்கி அவரின் ஆன்மிக, யோகப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தாா். அரவிந்தா் ஆசிரமம் மற்றும் ஆரோவில் சா்வதேச நகரை உருவாக்கினாா்.

அரவிந்தா் ஆசிரமத்தில் வாழ்ந்த ஸ்ரீ அன்னை 1973 நவம்பா் 17-இல் சமாதி நிலையை அடைந்தாா்.

அன்னையின் 52-ஆம் ஆண்டு மகா சமாதி தினத்தையொட்டி, திங்கள்கிழமை புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்தில் அதிகாலை ஆசிரமவாசிகளின் கூட்டு தியான நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீ அன்னை வாழ்ந்த அறையை பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com