புதுவை மத்திய பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு!

புதுவை மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு தொடர்பாக...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் இன்று(நவ. 18) நடைபெறவிருந்த தேர்வுகள் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து புதுவை மாநில அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மாற்று தேதியில் தேர்வுகள் நடைபெறும் என்றும் தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக் கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Summary

The exams scheduled to be held at Puducherry Central University today (Nov. 18) have been postponed due to rain.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com