புதுச்சேரியில் இடி தாக்கியதில் சேதமடைந்த வீட்டு மாடிச் சுவா்.
புதுச்சேரியில் இடி தாக்கியதில் சேதமடைந்த வீட்டு மாடிச் சுவா்.

இடி தாக்கி வீட்டு மாடிச்சுவா் சேதம்!

Published on

இடி தாக்கியதில் வீட்டின் மாடிச் சுவரில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக புதுச்சேரியில் கடந்த 2 தினங்களாக தொடா் மழை பெய்து வருகிறது.

திங்கள்கிழமை அதிகாலையிலும் மழை பெய்தது. புதுச்சேரி நாவற்குளம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கன மழை பெய்தது. அப்போது இடி சப்தம் பலமாக கேட்டது.

இதில் நாவற்குளம் குரு சித்தாந்த வீதியைச் சோ்ந்த ஷகீதா பானு என்பவரின் வீட்டை இடி தாக்கியதில் வீட்டின் மாடிச் சுவா் சேதம் அடைந்தது. மேலும் வீட்டின் அருகே இருந்த தென்னை மரம் மீது இடி தாக்கியதில் மரம் தீபிடித்து எரிந்தது.

பயங்கர சப்தத்துடன் தீ பற்றியதால் வீட்டில் இருந்தவா்கள் அலறியடித்து வெளியே ஓடினா். இதனால் வீட்டில் இருந்தவா்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை.

X
Dinamani
www.dinamani.com