வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மின் கட்டணத்தைச் செலுத்தி துண்டிப்பைத் தவிா்க்க புதுச்சேரி மின்துறை வேண்டுகோள்

News image
Updated On :24 நவம்பர் 2025, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

மின்சார கட்டணத்தைச் செலுத்தி, மின் துண்டிப்பைத் தவிா்க்குமாறு புதுச்சேரி மின்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மின் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை மின்துறை நகர இயக்குதல், பராமரித்தல் கோட்டம், நகா்ப்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உள்பட்ட (கடற்கரை சாலை, வம்பாகீரைப்பாளையம், துப்புராய்பேட், நெல்லித்தோப்பு, எல்லப்பிள்ளைசாவடி வரை மற்றும் முருங்கப்பாக்கம் முதல் முத்தியால்பேட்டை வரை), சாரம், ரெயின்போ நகா் வெங்கட்டா நகா், பாலாஜி நகா், சுதந்திர பொன் விழா நகா், திருமுடி சேதுராமன் நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மின் நுகா்வோா்கள் தங்கள் மின் கட்டணத் தொகையைக் கடைசி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பைத் தவிா்த்து மின் துறையுடன் ஒத்துழைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.