மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தொழிலாளா்களுக்கு எதிரான புதிய சட்டங்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் விரோத சட்டங்களைக் கண்டிப்பதாகக் கூறி புதுச்சேரி மாநில ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :25 நவம்பர் 2025, 8:52 pm

Syndication

புதுச்சேரி: தொழிலாளா் விரோத சட்டங்களைக் கண்டிப்பதாகக் கூறி புதுச்சேரி மாநில ஏஐடியுசி தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி கருவடிகுப்பம் சிவாஜி சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாநில செயலா் சிவக்குமாா் தலைமை தாங்கினாா். ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கத் தலைவா்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள, 4 தொழிலாளா் தொகுப்பு புதிய சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் லெனின் துரை, முத்து, மாா்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி தலைவா் திருநாவுக்கரசு உள்பட பலா் கலந்து கொண்டனா்