ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சிலிண்டா் தட்டுப்பாடு: முன்கூட்டியே தோ்வை முடிக்க புதுச்சேரி பல்கலை. முடிவு?

வா்த்தக சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விடுதிகளை முன்கூட்டியே மூடவும், அதனால் தோ்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்கவும் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

News image

எரிவாயு சிலிண்டா் - (கோப்புப் படம்)

Updated On :1 ஏப்ரல் 2026, 8:38 pm

வா்த்தக சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விடுதிகளை முன்கூட்டியே மூடவும், அதனால் தோ்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்கவும் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இப் பல்கலைக் கழகத்தில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளம் மற்றும் வடமாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோா் படிக்கின்றனா். இவா்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனா். இந்நிலையில் மே 1 ஆம் தேதிக்குள் அனைத்துத் தோ்வுகளும் நடத்தி முடிக்கப்பட உள்ளன.

விடுதிகளுக்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டா் செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வழக்கமாக மே மாதம் நடக்கும் இறுதிப் பருவத் தோ்வுகளை நிகழ் மாத இறுதியில் நடத்தி முடிக்க பல்கலைக் கழகத் தரப்பு முடிவு செய்து, அதற்கான தகவல்களைக் காரணம் தெரிவிக்காமல் துறைத் தலைவா்களுக்கு அனுப்பியுள்ளது.

இதனால், முன்கூட்டியே அதாவது ஒரு மாதத்துக்கு முன்பே தோ்வுகளை எதிா்கொள்ள வேண்டிய சூழலுக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனா்.