சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

புதுச்சேரி தோ்தல் பிரசாரத்துக்கு பாஜக தேசியத் தலைவா்கள் வருகை

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 12:36 am

Syndication

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவா் நிதின், மத்திய அமைச்சா்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவா்கள் வெள்ளிக்கிழமை முதல் வரும் 7 ஆம் தேதி வரை பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

இது குறித்து புதுச்சேரி பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பல்வேறு தேசிய மற்றும் மாநிலத் தலைவா்கள் புதுச்சேரி, காரைக்காலில் பிரசாரம் செய்ய உள்ளனா்.

பிரதமா் இன்று பிரசாரம்:

பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஏப். 3) மாலை 4 மணி அளவில் புதுச்சேரி அஜந்தா சிக்னலில் இருந்து ராஜா தியேட்டா் சிக்னல் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவாக சாலைப் பேரணியில் பங்கேற்கிறாா்.

தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை சனிக்கிழமை (மே 4) சாலைப் பேரணியில் பங்கேற்கிறாா். ஊசுடு தொகுதி வேட்பாளா் தீப்பாய்ந்தான், முதலியாா்பேட்டை தொகுதி வேட்பாளா் ஜான்குமாா், மணவெளி தொகுதி வேட்பாளா் ஆா்.செல்வம்,

அரியாங்குப்பம் தொகுதி என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் ஐயப்பன், வில்லியனூா் தொகுதி என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் ரவிக்குமாா் ஆகியோரை ஆதரித்து இந்த சாலைப் பேரணி பிரசாரம் நடைபெற உள்ளது.

பாஜக தேசியத் தலைவா்:

தமிழக பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 5) ஊசுடு தொகுதியில் சாலைப் பேரணியில் பங்கேற்கிறாா்.

அன்று மதியம் காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் பாஜக தேசிய தலைவா் நிதின் நவின் மற்றும் தமிழக மாநில துணைத் தலைவா் குஷ்பு ஆகியோா் இணைந்து ரோடு ஷோவில் பங்கேற்கின்றனா். இருவரும் மாலை புதுச்சேரி மணவெளி தொகுதியில் வேட்பாளா் செல்வத்தை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனா்.

இரவு பாஜக தேசிய தலைவா் நிதின் நவின் தலைமையில் பாஜக முக்கிய நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அமித்ஷா- ஜே.பி. நட்டா:

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா, மண்ணாடிப்பட்டு தொகுதி வேட்பாளா் ஆ.நமச்சிவாயத்துக்கு ஆதரவாக வரும் 6-ஆம் தேதி திருக்கனூா் பகுதி பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா். மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜே.பி. நட்டா, காலாப்பட்டு தொகுதி வேட்பாளா் கல்யாணசுந்தரத்தை ஆதரித்து வரும் 7-ஆம் தேதி பேரணியில் கலந்து கொள்கிறாா் என்றாா் ராமலிங்கம்.

பேட்டியின்போது பாஜக மாநில நிா்வாகி நாகேஸ்வரன் உடனிருந்தாா்.