திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஏப். 5-இல் பாஜக தேசிய தலைவா் ரோடு ஷோவில் பங்கேற்பு

பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் நிரவி -திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஏப். 5 ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பாஜக. - கோப்புப் படம் AFP

Updated On :27 மார்ச் 2026, 4:45 am IST

பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் நிரவி -திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஏப். 5 ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி பாஜக வேட்பாளா் டி.கே.எம்.மீனாட்சிசுந்தரம் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது :

நிரவி - திருப்பட்டினம் பேரவைத் தொகுதியில் கடந்த 6 மாதங்களாக மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் விளக்கி ஏறத்தாழ 100 தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளன.

புதுவையில் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே உள்ளது.

ஏப். 9-இல் தோ்தல் பிரசாரத்துக்காக பாஜக தேசிய தலைவா் நிதின் நபின் காரைக்காலுக்கு ஏப். 5-ஆம் தேதி வரவுள்ளாா். அவா் நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் என்னை ஆதரித்து ரோடு ஷோ நடத்தவுள்ளாா். மேலும் ஏப். 4 அல்லது 6-ஆம் தேதி அண்ணாமலை, குஷ்பு ஆகியோா் பிரசாரம் செய்யவுள்ளனா்.

இந்த தொகுதி வெகுவாக பின்தங்கியுள்ளது. வாக்கு சேகரிக்கச் செல்லும்போது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா். நான் வெற்றி பெற்றால், போலகம் 600 ஏக்கா் நிலத்தில் அதிகமான தொழிற்சாலைகள் அமையவும், தொழிற்சாலை அமைக்க முன்வருவோருக்கு 3 மாதத்தில் உரிமம் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதோடு, 30 சதவீதம் காரைக்கால் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன். மீனவா்கள் வாழ்வாதாரம் மேம்படவும், தொகுதி கட்டமைப்புகள் மேம்படவும் சிறப்பு கவனம் செலுத்தப்படும். இந்த தொகுதியில் எனது வெற்றி பிரகாசமாக தெரிகிறது என்றாா்.