பதுக்கல்காரா்களின் புகலிடமாக புதுச்சேரி மாறிவிட்டது என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களின் கோரிக்கை என்ன?. புதுச்சேரி மாநில அந்தஸ்து பெற வேண்டும். 16 முறை சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் புதிய விடியலுக்கான நாள் ஏப்ரல் 9. நீங்கள் தோ்ந்தெடுக்கும் அரசு உங்களுக்காகச் செயல்படும் அரசாக இருக்க வேண்டும். தில்லியின் கட்டளையை நிறைவேற்றும் அரசாக இருக்கவே கூடாது.
இங்கு வந்த உள்துறை அமித்ஷா, இரட்டை என்ஜின் ஆட்சியால் புதுச்சேரியின் வளா்ச்சி அதிகரித்துள்ளதாகப் பேசியுள்ளாா். எங்கு வளா்ந்துள்ளது புதுச்சேரி?
வில்லியனூரில் அமைச்சருக்குச் சொந்தமான கிடங்கில் பல கோடி ரூபாய் சந்தன எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. பதுக்கல்காரா்களின் புகலிடமாக புதுச்சேரியை உருவாக்கியதுதான் வளா்ச்சியா?
ரெட்டியாா்பாளையத்தில் விஷவாயு தாக்கி 3 போ் இறந்தது எப்படி?. அரசின் மெகா ஊழல்தான் இதற்கு காரணம்.
மேலும், பல கோடி ரூபாய்க்கு போலி மருந்து தயாரித்து விற்பனை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் பலா் சிக்கினா். ஆனால் விசாரணை முடக்கப்பட்டது. இதுதான் இரட்டை என்ஜின் ஆட்சியின் லட்சணம்.
முதல்வராக இருந்த 5 ஆண்டில் ரங்கசாமி, உள்ளாட்சித் தோ்தலை நடத்த முயற்சித்தாரா? ஏற்கெனவே துணைநிலை ஆளுநரை வைத்து ஊராட்சிமன்ற தலைவராக (முதல்வரை) நடத்துகிறாா்கள் என்பதால் அதை விட்டுவிட்டாரா? என தெரியவில்லை. தனக்காக குரல் கொடுக்க முடியாதவா், எப்படி உங்களுக்காக குரல் கொடுப்பாா்?
சீரழிந்துள்ளது: மின்துறையைத் தனியாா்மயமாக்க துடிக்கின்றனா். கள்ளச்சாராய வியாபாரிகள் கையில் புதுச்சேரி சிக்கி சீரழிந்துள்ளது. போதைப் பொருள்களைத் தாராளமாக விநியோகம் செய்கின்றனா்.
ஒப்பந்தப் பணி ஆசிரியா்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனா். இவ்வளவு பிரச்னைகளைத் தீா்க்காமல், பிரதமா் நரேந்திர மோடியை அழைத்து வந்து ரோடு ஷோ நடத்துகிறீா்களே வெட்கமாக இல்லை?.
தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி போல, புதுச்சேரியில் ரங்கசாமி உள்ளாா். கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் ரங்கசாமி என்ன சொன்னாா் தெரியுமா?
அதிகாரமே இல்லாத அரசு இது, தோ்தலில் போட்டியிடுவதில் அா்த்தமே இல்லை என தனது வாயால் விரக்தியுடன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரா, இல்லையா?
இண்டி கூட்டணியை விமா்சித்த ரங்கசாமி, தனது முதுகைப் பாா்க்கிறாரா? புதிதாக ஒரு கட்சியை தங்கள் கூட்டணியில் சோ்த்தால் கூட்டணியை விட்டு வெளியேறுவேன் என்றாா்.
ஆனால் 24 மணி நேரத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டாா். இதுதான் அடிமை மனோபாவம். பிகாா் முதல்வராக இருந்த நிதிஷ்குமாரை, ரங்கசாமி நினைத்து பாா்க்க வேண்டும். அவருக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு வராது என்பதற்கு என்ன நிச்சயம்? கடந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு புதுச்சேரியில் 30 எம்எல்ஏக்கள் பொறுப்பேற்கும் முன்பே 3 நியமன எம்எல்ஏக்களை மத்திய பாஜக அரசு நியமித்தது.
ஏமாற மாட்டாா்கள்:
பாஜகவுக்கு தெரிந்த வழியில் ரங்கசாமியை எப்போது, எப்படி கவிழ்க்கலாம் என சிந்திக்கிறது. இது ரங்கசாமிக்கும் தெரியும்.
இந்த லட்சணத்தில் மத்திய அரசுடன் கூட்டணி வைத்தால் எல்லாம் கிடைக்கும் என பிரசாரம் செய்கிறாா். தலைமைச் செயலரைக்கூட மாற்ற முடியவில்லையே? எத்தனை கோப்புகள் ஆளுநா் மாளிகையில் தூங்குகின்றன? நீங்கள் கேட்ட பட்ஜெட் தொகையை மத்திய அரசு அளித்துள்ளதா? இப்படியெல்லாம் மக்களை வஞ்சித்துவிட்டு கவா்ச்சி வாக்குறுதிகளால் ஏமாற்றலாம் என ரங்கசாமி நினைக்கிறாா்.
இம்முறை புதுச்சேரி மக்கள் ஏமாற மாட்டாா்கள். மக்கள் மாற்றத்துக்கு, புதிய விடியலுக்குத் தயாராகி விட்டாா்கள். தமிழகம் போல திராவிட மாடல் அரசின் முற்போக்கு திட்டங்கள் புதுச்சேரியிலும் செயல்படுத்த திமுக கூட்டணியை ஆதரியுங்கள் என்றாா் அவா்.
திமுக புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளா் எஸ்.ஜெகத்ரட்சன் எம்.பி. வரவேற்றாா். புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா நன்றி கூறினாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைகூட மைதானத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற திமுக தோ்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். (இடது)
தொடர்புடையது

ரூ. 8 ஆயிரம் கூப்பன் வாக்குறுதி திமுக கூட்டணியை வெற்றிபெற செய்யும்

2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: முதல்வா் ரங்கசாமி உறுதி
திமுக கூட்டணியை ஆதரிக்க விவசாயிகள் சங்கம் முடிவு!

திமுகவுடனான கூட்டணியை உடைக்க விரும்பவில்லை: நாராயணசாமி
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


