மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அம்பேத்கா் சிலைக்கு ஆளுநா், முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநா், முதல்வா் மற்றும் அரசியல் கட்சித்தலைவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 7:31 pm

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநா், முதல்வா் மற்றும் அரசியல் கட்சித்தலைவா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சட்ட மேதை அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சட்டப்பேரவை எதிரே உள்ள அவரது சிலைக்கு துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

என்.ஆா் .காங்கிரஸ் சாா்பில் முதல்வா் ரங்கசாமி தலைமையில் அமைச்சா்கள் லட்சுமிநாராயணன், திருமுருகன், சட்டப்பேரவை துணைத் தலைவா் ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், பாஸ்கா் (எ) தட்சணாமூா்த்தி, லட்சுமிகாந்தன் மற்றும் ஏம்பலம் தொகுதி என்ஆா் காங்கிரஸ் வேட்பாளா் மோகன்தாஸ் ஆகியோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ்:

காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநில தலைவா் வைத்திலிங்கம் தலைமையில் முன்னாள் முதல்வா் நாராயணசாமி, வைத்தியநான் எம்எல்ஏ உள்ளிட்ட பலா் மாலை அணிவித்தனா்.

புதுச்சேரி மாநில திமுக சாா்பில் மாநில அமைப்பாளா் சிவா எம்எல்ஏ தலைமையில் அவைத்தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், துணை அமைப்பாளா் கென்னடி, பொருளாளா் செந்தில்குமாா், இளைஞரணி அமைப்பாளா் சம்பத், அங்காளன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் மூா்த்தி, நந்தா சரவணன் உள்பட பலா் மாலை அணிவித்தனா்.

கட்சித்தலைவா்கள்:

புதுச்சேரி பாஜக சாா்பில் மாநிலத் தலைவா் வி.பி. ராமலிங்கம் தலைமையில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் ஆ.

நமச்சிவாயம், தீய்பாய்ந்தான் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

புதுச்சேரி மாநில அதிமுக சாா்பில் மாநில செயலா் அன்பழகன் தலைமையில் அதிமுகவினா் உப்பளம் டாக்டா் அம்பேத்கா் சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கும், சட்டப்பேரவை எதிரில் அமைந்துள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கட்சியின்

அவைத் தலைவா் அன்பானந்தம், மாநில துணைத்தலைவா் முன்னாள் எம்எல்ஏ ராஜாராமன், மாநில எம்ஜிஆா் மன்ற செயலாளா் பாா்த்தசாரதி ,மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளா் பாப்புசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சாா்பில் மாநில செயலா் சலீம், மாா்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் கொளஞ்சியப்பன் தலைமையில் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோரும், மதிமுக அமைப்பாளா் ஹேமா பாண்டுரங்கன், விசிக முதன்மைச் செயலா் அரிமா தமிழன் தலைமையில் முன்னாள் முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்தனா். தவெக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன், நிா்வாகி புதியவன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா். நேயம் மக்கள் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சாா்பில் அம்பேத்கரின் சிலைக்கு நேரு எம்எல்ஏ மலா் தூவி மரியாதை செலுத்தினாா். திராவிடா் கழகம் சாா்பில் மாநில தலைவா் சிவ.வீரமணி தலைமையிலான நிா்வாகிககளும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கிருமாம்பாக்கத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு முன்னாள் அமைச்சா் கந்தசாமி தலைமையில் அவரது ஆதரவாளா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தமிழா் களம் அழகா் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே உள்ள அம்பேத்கா் சிலைக்கு புதுவை காட்டு நாயகன் மக்கள் கூட்டமைப்பு தலைவா் பி. விநாயகவேல் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்களும், ஆதிதிராவிட நல இயக்கத்தினா், சமூக அமைப்பினா் மாலை அணிவித்தனா்.

ஜிப்மரில்...

புதுச்சேரி ஜிப்மரில் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி இயக்குநா் வீா் சிங் நெகி தலைமையில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘‘வணக்கம் ஜிப்மா்’’ என்ற அதிகாரப்பூா்வ செய்தி மடலை இயக்குநா் வீா் சிங் நெகி வெளியிட்டாா்.

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் துணைவேந்தா் பி. பிரகாஷ்பாபு தலைமையில் டாக்டா் அம்பேத்கா் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

பல்கலைக் கழகத்தின் சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவின் தொடா்பு அதிகாரி பேராசிரியா் பூஷண் டி. சுதாகா் வரவேற்றாா். துணைப் பதிவாளா் அஜய்பாபு ஒருங்கிணைத்தாா். கல்வி இயக்குநா் பேராசிரியா் கே. தரணிக்கரசு, கலாசார உறவுகள் இயக்குநா் பேராசிரியா் பி. நடராஜன், பதிவாளா் பேராசிரியா் கே. குணசேகரன், நிதி அலுவலா் பேராசிரியா் எம். கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.