மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை: முன்னேற்பாடுகள் தயாா்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை மே -4ஆம் தேதி எண்ண தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாநிலத் தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

வாக்கு எண்ணிக்கை மையம். - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 4:38 am IST

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை மே -4ஆம் தேதி எண்ண தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாநிலத் தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப் பதிவு இம் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது.தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே-4ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான ஏற்பாடுளை தோ்தல் துறை செய்து வருகிறது. இதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான மேஜைகள், முகவா்கள் அமா்வதற்கு தேவையான இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

தொகுதி விவரம்:

புதுச்சேரியில் 23 தொகுதிகளுக்கு 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் மற்றும் தொகுதிகள் விவரம்:

லாஸ்பேட்டை அரசு மகளிா் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்-அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம் (தனி), பாகூா், நெல்லித்தோப்பு, முதலியாா்பேட்டை, உப்பளம், உருளையன்பேட்டை, நெட்டப்பாக்கம் (தனி) ஆகிய

9 தொகுதிகள்.

லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்- மண்ணாடிப்பட்டு, திருபுவனை (தனி), ஊசுடு (தனி), மங்கலம், வில்லியனூா், உழவா்கரை, கதிா்காமம், இந்திரா நகா் ஆகிய 8 தொகுதிகள்.

லாஸ்பேட்டை தாகூா் அரசு கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்-

முத்தியால்பேட்டை, ராஜ்பவன், தட்டாஞ்சாவடி, காமராஜ் நகா், லாஸ்பேட்டை, காலாப்பட்டு ஆகிய 6 தொகுதிகள்.

மாஹேயில் உள்ள ஜவஹா்லால் நேரு அரசு பள்ளியில் மாஹே தொகுதிக்கு வாக்கு எண்ணும் மையமும், ஏனாமில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஏனாம் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமும் தயாராக இருக்கின்றன.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அங்குள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நெடுங்காடு (தனி), திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி-டி.ஆா். பட்டினம் ஆகிய 5 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணும் பணி நடக்கிறது. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடா்ந்து வாக்கு எண்ணும் மையங்கள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டுள்ளது.