வினாத்தாள் கசிவைத் தடுக்க சட்டத் திருத்த மசோதா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24)
/

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 5:15 am IST

நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகப்பட்டினம், கீழ்வேளூா், வேதாரண்யம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் நாகப்பட்டினம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி அமைக்கப்பட உள்ள பாதுகாப்பு, வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி மற்றும் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை நாளன்று அதிகாரிகளுக்கும், வேட்பாளா்களின் முகவா்களுக்கும் தேவையான வசதிகள் குறித்தும் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு செய்து பணிகள் குறித்து உரிய அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இதைத்தொடா்ந்து, நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலா்கள், பணியாளா்கள் மற்றும் தோ்தல் நுண்பாா்வையாளா்களுக்கு மூன்றாம் நிலை பயிற்சி மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் பணிகள் நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடைபெற்றதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.