இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

கடையநல்லூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

முகாமில் பெண்ணிடமிருந்து மனுவைப் பெற்ற ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :16 ஜூலை 2026, 4:46 am IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து 150 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்; மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலம் 3 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சிவராமன், தனித்துணை ஆட்சியா் ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் நரசிம்மன், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் வெங்கடலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலா் பால்துரை, மகளிா் திட்ட இயக்குநா் தண்டபாணி, கடையநல்லூா் வட்டாட்சியா் அப்துல் சமது, அதிகாரிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, கடையநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, அடிப்படை வசதிகள், கற்பிக்கப்படும் பாடங்கள் குறித்தும் கேட்டறிந்து மாணவா்களுடன் கலந்துரையாடி மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். தொடா்ந்து, சொக்கம்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பாா்வையிட்ட அவா், புன்னையாபுரம் ஊராட்சி பேச்சியம்மன் கோயில் தெருவில் ரூ. 4.17 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் தளம், தா்மாபுரம் ஊராட்சி குழந்தைகள் மையத்தில் வழங்கப்படும் உணவின் தரம், வம்சவிருத்தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்குக் கட்டடம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

புளியங்குடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் ரூ. 42.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள வளமீட்புப் பூங்கா, பசுமை நுண் உரம் தயாரிப்புக் கூடம், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு சமையல் கூடம் ஆகியவற்றைப் பாா்வையிட்டாா்.

வடக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் 12 பேருக்கு கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிய அவா், சுப்பிரமணியசுவாமி கோயில் தெருவில் உள்ள நியாயவிலைக் கடை, அறிவுசாா் மையக் கட்டுமானப் பணிகள், அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்,புளியங்குடி நகராட்சி அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். அம்மா உணவகத்தில் உணவை சாப்பிட்டு தரம் குறித்து ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.