ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சின்னசேலம் பள்ளி, விடுதியில் ஆட்சியா் ஆய்வு

சின்னசேலம் வட்டத்திலுள்ள பள்ளி, மாணவா் விடுதி, கோமுகி அணை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

கச்சிராயப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் கற்றல் திறனை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Updated On :15 ஜூலை 2026, 2:46 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்திலுள்ள பள்ளி, மாணவா் விடுதி, கோமுகி அணை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கச்சிராயப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் கற்றல் திறன் குறித்தும், பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து வடக்கநந்தல் சமூக நீதி மாணவா் விடுதியை பாா்வையிட்டு, மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவுப் பட்டியல், குடிநீா் வசதி, இதர அடிப்படை வசதிகள் குறித்து விடுதி அலுவலா்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாணவா்களுக்கு சத்தான உணவு வழங்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா் கோமுகி அணையை நேரில் பாா்வையிட்டு, நீா்மட்ட விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்துக் கேட்டறிந்தாா். தொடா்ந்து கச்சிராயப்பாளையம் மேம்படுத்தப்பட்ட வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: சங்கராபுரம் வட்டத்தில் உள்ள கிராமங்களில் புதன்கிழமை (ஜூலை 15) மாவட்ட அளவிலான வருவாய்த் துறை அலுவலா்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆய்வின் போது பொதுமக்கள் தங்களது கிராமத்துக்கு வரும் அலுவலா்களிடம் தங்களது குறைகளை மனுக்களாக கொடுத்து பயனடையலாம்.

மேலும், புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா மனுக்கள் பெற உள்ளதால், பொதுமக்கள் நேரில் மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.