நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்பு

News image

வெ. வைத்திலிங்கம் எம்.பி. - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:58 am IST

காஷ்மீா் யூனியன் பிரதேசமான பகல்ஹாமில் திங்கள்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் புதுச்சேரி எம்.பி. வெ.வைத்திலிங்கம் பங்கேற்றாா்.

இது குறித்து புதுச்சேரியில் உள்ள அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசம் பகல்ஹாமில் திங்கள்கிழமை நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழுவின் கூட்டம் நடைபெற்றது.

‘இந்திய ரயில்வேயில் புதிய ரயில்வே திட்டங்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள்’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினரும், புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான வெ.வைத்திலிங்கம், ரயில்வே அமைச்சகத்தின் வடக்கு ரயில்வே மற்றும் ஜம்மு-காஷ்மீா் மாநில நிா்வாகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் புதிய ரயில் பாதைகள்அமைத்தல், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப நடவடிக்கைகள், கூடுதல் வசதிகளை மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.