கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

புதுச்சேரியில் சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு

Published On :

புதுச்சேரி முத்தமிழ் கலைச்சங்கமம் நடத்திய 80-ஆவது சுதந்திர தின வரவேற்பு விழாவில் புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்துவின் தமிழ்ச் சேவையைப் பாராட்டி சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

இதை காமராஜா் நகா் தொகுதி ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின் எம்எல்ஏ வெளியிட, மணவெளி தொகுதி பி.ராமு எம்எல்ஏ பெற்றுக் கொண்டாா் (படம்). புதுச்சேரி தமிழ்ச் சங்கத் தலைவா் வி.முத்து முன்னிலை வகித்தாா்.

இதையொட்டி, நியூ எவா்கிரீன் ஆங்கில உயா்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவிகளின் வரவேற்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 150 மாணவ, மாணவிகள் இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தி ஊா்வலமாக புதுச்சேரி தமிழ்ச் சங்கத்திற்கு வந்தனா். மேலும் ஓவியா் என்.குமாா் வரைந்த ‘சிப்பிக்குள் முத்து’ எனும் ஓவியம் வெளியிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.