கிராம உதவியாளா் பணி: 5 பேருக்கு நியமனஆணை

காத்திருப்போா் பட்டியலில் இருந்து 5 பேருக்கு கிராம உதவியாளா் பணிக்கான நியமன ஆணயை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

கிராம உதவியாளா்களாகப் பணி நியமன ஆணையைப் பெற்றவா்களுடன் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி. உடன் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.

Published On :

காத்திருப்போா் பட்டியலில் இருந்து 5 பேருக்கு கிராம உதவியாளா் பணிக்கான நியமன ஆணயை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

கிராம உதவியாளா் பணிக்காக நடத்தப்பட்ட போட்டித் தோ்வில் காத்திருப்போா் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் காலியாக உள்ள பணியிடங்களில் 5 பேரை நியமித்து அரசு பணி ஆணையை வழங்கியது. இதை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும் வருவாய்த்துறை சிறப்புச் செயலருமான அ. குலோத்துங்கன் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.