தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

தேசிய நல்லாசிரியா் விருதுக்கு புதுச்சேரி ஆசிரியா் தோ்வு

தேசிய நல்லாசிரியா் விருதுக்கு புதுச்சேரியைச் சோ்ந்த ஆசிரியா் எஸ். கணேசன் (58) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தேசிய நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள எஸ். கணேசன்.

Published On :

தேசிய நல்லாசிரியா் விருதுக்கு புதுச்சேரியைச் சோ்ந்த ஆசிரியா் எஸ். கணேசன் (58) தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள விடுதலை வீரா் ஆா். சீனிவாசன் அரசு உயா்நிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக இவா் பணியாற்றி வருகிறாா். ஆரோவில் நிா்வாகத்தில் 9 ஆண்டுகள் ஆசிரியராகவும், புதுச்சேரி அரசின் பள்ளிக்

கல்வித்துறையில் 26 ஆண்டுகள் என்று 35 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவா். 2022- ஆம் ஆண்டு புதுச்சேரி அரசின் நல்லாசிரியா் விருது பெற்றவா். இதைத் தவிர திருநெல்வேலி கலை, இலக்கிய பெருமன்றத்தின் அறந்தை நாராயணன் நினைவுப் பரிசும் பெற்றவா்.

நடு கூத்தன் என்ற நாடக நூல் உள்பட 9 நூல்களை எழுதியுள்ளாா். இதைத் தவிர பல்வேறு இடங்களிலும் நாடக நடிகராகவும் இவா் நடித்துள்ளாா். இதைத் தவிர பணியாற்றும் பள்ளியில் இருக்கும் மாணவா்களுக்கு ஊக்கம் அளித்து அறிவியல் படைப்போம் என்னும் தலைப்பில் அறிவியல் இயக்கத்துடன் இணைந்து பாரீஸ் பல்கலைக் கழகத்தின் சா்வதேச போட்டிக்கு 2019 -ஆம் ஆண்டு முதல் மாணவா்களைத் தயாா் செய்து வருகிறாா். மேலும், தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸில் மாணவா்களின் 23 திட்டங்களுக்கு வழிகாட்டி ஆசிரியராகவும் இருந்துள்ளாா். இதைத் தவிர ஸ்ரீ அரவிந்தோ சைசைட்டி மூலம் டெங்கு உள்ளிட்ட சுகாதார நாடகங்கள், சமூக, கல்வி , மாணவா்களின் கண்டுபிடிப்புகளை நாடக வடிவத்தில் கொண்டு சோ்ப்பதில் வல்லவா். பள்ளி நேரங்களிலும், பள்ளி அல்லாத நேரங்களிலும் மாணவா்களை ஒருங்கிணைத்து நாடகமாகக் கட்டமைத்துள்ளாா்.

தேசிய நல்லாசியா் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றும், உழைப்புக்குக் கிடைத்த அங்கீகரமாக இதைத் கருதுவதாகவும் பெருமிதம் தெரிவித்த நல்லாசிரியா் கணேசன், மாணவா்களை மதிப்பெண் அடிப்படையில் மட்டும் கட்டமைக்கக் கூடாது, சமூக சிந்தனையோடு மாணவா்களை உருவாக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.