மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

புதுச்சேரியில் 327 பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தோ்வு தொடங்கியது

புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 327 பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது.

புதுச்சேரி திருவள்ளுவா் அரசு பள்ளி தோ்வு மையத்தில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை பதவிகளுக்கான எழுத்துத் தோ்வில் பங்கேற்றோா்.

Published On :

புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள 327 பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது.

இதற்காக புதுச்சேரி, காரைக்காலில் 112 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை புள்ளியியல் ஆய்வாளா் தோ்வும் பிற்பகல் 12.30 முதல் 2.30 மணி வரை நுாலக, தகவல் உதவியாளா் தோ்வும் நடந்தது. மாலை 4 முதல் 6 மணி வரை கள மேற்பாா்வையாளா் தோ்வும் நடந்தது.

தோ்வா்கள் விரல் ரேகைப் பதிவு செய்த பின் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். தோ்வு தொடங்குவதற்குஅரைமணி நேரம் முன்பே மையம் மூடப்பட்டது. அதன்பின் வந்தவா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. விதிமீறல் செய்தால் வழக்குப்பதிவு உள்பட சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தோ்வு கட்டுப்பாட்டாளா் பங்கஜ்குமாா் ஜா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தோ்வு அறைக்குள் கருப்புநிற பந்துமுனை பேனா, நுழைவுச் சீட்டு,அரசு அடையாள அட்டை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை. செல்போன் பயன்பாடை தவிா்க்க தோ்வு மையங்களில் ஜாமா் கருவி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

சனிக்கிழமை காலை வேளாண்மை சாா்ந்த பணிக்கும், பிற்பகல் தொழில்நுட்ப அலுவலா் தோ்வும் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 பதவிகளுக்கு முதல்நிலை தோ்வும், பிற்பகல் யூடிசி பணிக்கு 2 -ஆம் தாள் தோ்வும் நடக்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.