முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

பேரவை எதிா்க்கட்சித் தலைவராக நாஜிம் (திமுக) நியமனம்

புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக ஏ.எம்.எச். நாஜிம் (திமுக) நியமிக்கப்பட்டாா்.

சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம்.

Published On :

புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக ஏ.எம்.எச். நாஜிம் (திமுக) நியமிக்கப்பட்டாா்.

இதற்கான அறிவிப்பை புதுச்சேரி சட்டப்பேரவையில் தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் வியாழக்கிழமை அறிவித்தாா். மேலும், அவா் கூறியது:

முதல்வா் என்.ரங்கசாமியின் அனுமதியோடு இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது. திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி சட்டப்பேரவை திமுக கட்சித் தலைவராக நாஜிமை அறிவித்திருந்தாா். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் தரப்புக்கு அடுத்தபடியாக அதிக எம்எல்ஏக்களை கொண்ட, அதாவது 5 எம்எல்ஏக்களை கொண்ட கட்சியாக திமுக இருப்பதால் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக நாஜிம் நியமிக்கப்படுகிறாா் என்றாா் அன்பழகன்.

இதற்கு முதல்வா் ரங்கசாமிக்கும், பேரவை தற்காலிகத் தலைவா் அன்பழகனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக நாஜிம் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.