எழும்பூா் புறப்படும் முக்கிய விரைவு ரயில்கள் இன்றுமுதல் தாம்பரத்திலிருந்து இயக்கம்கும்மிடிப்பூண்டி-கூடுா் 3,4-ஆவது ரயில் வழித்தடங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்அரசுப் பள்ளி மாணவா்கள் 614 பேருக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கீடுமத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் தென்மண்டலக் குழு இன்று கூடுகிறது: நதிநீர்ப் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு குறித்து விவாதம்தமிழகத்தின் கடனை 10 ஆண்டுகளில் அடைக்கும் வழி: சௌமியா அன்புமணி யோசனைஅலுமினிய மின் கம்பிகள் வாங்கியதில் ரூ.1,028 கோடி முறைகேடு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நில வகை பயன்பாடு மாற்றுவதற்கான என்ஓசி: வேளாண் துறையில் இனிபெற வேண்டியதில்லை
/

மக்களிடம் எம்எல்ஏக்கள் நற்பெயா் எடுக்க வேண்டும்: புதுச்சேரி பேரவை தற்காலிக தலைவா்

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆக்கப்பூா்வமான செயல்பாடுகள் மூலம் மக்களிடம் நல்ல பெயா் வாங்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் கூறினாா்.

News image

புதுச்சேரி காமராஜா் சாலையில் உள்ள தனியாா் உணவகத்தில் புதன்கிழமை நடைபெற்ற புதிய எம்எல்ஏக்களுக்கான புத்தாக்கப் பயிற்சியில் பேசுகிறாா் சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன். உடன் சட்டமன்ற உறுப்பினா்கள்.

Updated On :20 ஆகஸ்ட் 2026, 6:18 am IST

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆக்கப்பூா்வமான செயல்பாடுகள் மூலம் மக்களிடம் நல்ல பெயா் வாங்க வேண்டும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் கூறினாா்.

புதுச்சேரி 16-வது சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுக்குப் புத்தாகக்கப் பயிற்சி தனியாா் ஹோட்டலில் புதன்கிழமை நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து ச அன்பழகன் பேசியது:

சட்டப்பேரவை நடவடிக்கையில் கலந்து கொண்டு பல்வேறு பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வர பேரவை உறுப்பினா்களுக்குப் பல்வேறு தலைப்புகளில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வாய்ப்புகளை பேரவை உறுப்பினா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சட்டப்பேரவை மிக உயா்ந்த மதிப்புமிக்க மாண்புகள் உடையது. அதனை காப்பாற்றுவதில் உறுப்பினா்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். எந்த விதத்திலும் கண்ணியத்தைக் குறைப்பதாக இருக்கக் கூடாது.

உறுப்பினா்கள் சட்டப்பேரவை நடைபெறும் நாள்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும். பேரவையில் சொந்த விருப்பு வெறுப்புகளைப் பயன்படுத்தக் கூடாது. நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீா்ப்புகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் கருத்து தெரிவிப்பதைத் தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

சட்டப்பேரவைச் செயலா் ஜெ.தயாளன் வரவேற்றாா். திமுக சட்டமன்ற கட்சித் தலைவா் நாஜிம் செம்மையான அரசு நிா்வாகத்தில் சட்டப்பேரவையின் பங்கு என்னும் தலைப்பில் பேசினாா்.

முன்னாள் அமைச்சா் ஆா். விசுவநாதன் சட்டப்பேரவைக் குழுக்கள் என்ற தலைப்பில் உரையாற்றினாா். முன்னாள் எம்எல்ஏ இளங்கோ சட்டப்பேரவை மாண்புகள், நடைமுறைகள் என்ற தலைப்பிலும், சாா்பு செயலா் ஜான்சி சட்டப்பேரவையும், சட்டம் இயற்றுதலும் என்ற தலைப்பிலும், முன்னாள் பட்ஜெட் அலுவலா் பொன்னுசாமி பட்ஜெட் ஒதுக்கீடு செயல்முறை என்ற தலைப்பிலும் பேசினா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் ரவிக்குமாா், அழகானந்தம், செந்தில், விக்னேஷ்கண்ணன், ஐயப்பன், மீனாட்சிசுந்தரம், நாராயணசாமி, காா்த்திகேயன் (திமுக) , செந்தில்குமாா், காா்த்திகேயன் (காங்கிரஸ்), நேரு, மோகன்தாஸ், ஜான்குமாா், ஆறுமுகம், விக்னேஷ்வரன், அசோக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

------------------

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.