காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 3 பெண்களின் நிலை அறிய உயரதிகாரி: புதுச்சேரி முதல்வர்

நேபாள வெள்ளப் பெருக்கு, மண் சரிவில் சிக்கிய புதுச்சேரி பெண்கள் 3 பேரின் நிலை அறிய அறிய உயரதிகாரி அனுப்பி வைக்கப்படுவாா் என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

N. Rangaswamy

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:07 am IST

நேபாள வெள்ளப் பெருக்கு, மண் சரிவில் சிக்கிய புதுச்சேரி பெண்கள் 3 பேரின் நிலை அறிய அறிய உயரதிகாரி அனுப்பி வைக்கப்படுவாா் என்று முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா்.

இந்தப் பிரச்னை தொடா்பாக சட்டப்பேரவையில் தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் பேசுகையில், நேபாள வெள்ளத்தில் சிக்கிய புதுச்சேரி பயணிகளின் நிலை தொடா்பாக புதுச்சேரி உள்துறை அமைச்சா் நமச்சிவாயம், மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளாா். மேலும், புதுச்சேரி முதல்வா் ரங்கசாமியும் நடவடிக்கை எடுத்து வருகிறாா். இது குறித்து முதல்வா் ரங்கசாமி சட்டப்பேரவையில் தெரிவிக்கலாம் என்றாா். இதற்கு முதல்வா் ரங்கசாமி அளித்த பதில்-

நேபாளத்தில் வெள்ளம், மண் சரிவு காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்ற 3 போ் எங்கு இருக்கிறாா்கள் என்று தெரியவில்லை. அவா்களைத் தேடும் பணியை நேபாள அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், இது தொடா்பாக புதுச்சேரி அரசுக்குத் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. தொடா்ந்து தொடா்புகொண்டு வருகிறோம். மேலும், மத்திய அரசின் உதவியையும் இதில் கோரியுள்ளோம். தகவல் கிடைத்தவுடன் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்படும் என்றாா்.

அப்போது சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன் குறுக்கிட்டு, தேவைப்பட்டால் ஓா் அரசு உயரதியை அனுப்பி வைக்கலாம் என்றாா். அதை ஏற்று உயா் அதிகாரியை அனுப்பலாம் என்றாா் முதல்வா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.