நேபாள பெருவெள்ளம்: சிக்கிய அஸ்ஸாம் மக்களை மீட்க அவசர உதவி மையம்!
நேபாளத்தில் சிக்கியுள்ளவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அஸ்ஸாம் முதல்வர் கூறியது பற்றி..

நேபாள பெருவெள்ளம் - AP
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தில் சிக்கியுள்ள அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களைத் தாயகம் அழைத்து வரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா தெரிவித்தார்.
நேபாள மாநிலத்தில் இதுவரை கண்டிராத வகையில் ஆகஸ்ட் 26 அன்று பனிப்பாறை உடைந்து ஆறுகளுக்கிடையே ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நேபாளத்துக்குச் சுற்றுலாச் சென்றவர்கள், கையிலாய யாத்திரை மேற்கொண்டவர்கள் எனப் பலர் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அங்குச் சிக்கியுள்ளவர்களைச் சொந்த ஊருக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் அந்தந்த மாநிலத்து அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே அஸ்ஸாம் மாநிலத்தில் இதுவரை எத்தனை பேர் மாயமாகியுள்ளனர் என்ற விவரங்கள் வெளியிடவில்லை.
இதுதொடர்பாக அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நேபாளத்தில் சிக்கியுள்ளவர்களின் குடும்பத்தினரோடு தொடர்பில் இருப்பதோடு தொடர்புடைய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
நேபாளத்தில் உள்ள தங்கள் உறவினர்கள் குறித்த தகவல்களைக் கோரும் குடும்பங்களிடமிருந்து மாநில அரசுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று தலைமைச் செயலாளர் ரவி கோட்டா தெரிவித்தார்.
புது தில்லியில் உள்ள அஸ்ஸாம் இல்லத்தில் மாநில அரசு வெள்ளம் தொடர்பான அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது. இதற்கான உதவி எண் விவரங்கள்: 011-23010299/98 மற்றும் 28877111 (அவசர உதவி எண்கள்), 9101089151 (அனுரன் மேதி) மற்றும் 892057057 (வினோத் கலிதா).
மேலும், சில உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையன்று 469-ஆக உயர்ந்தது. இதுவரை, பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து காயமடைந்த மற்றும் சிக்கித் தவித்த 1,545 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 84 பேர் தற்போது காத்மாண்டுவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 2,391 நேபாள ராணுவ வீரர்கள் உள்பட மொத்தம் 7,451 பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நேபாளக் காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
Assam Chief Minister Himanta Biswa Sarma said that efforts were underway to ensure the safety and return of those from the state, who have been stranded due to the devastating flash floods in Nepal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







