விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 27 - நேரலை!

இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...

தமிழ்நாடு சட்டப்பேரவை.

தமிழ்நாடு சட்டப்பேரவை.

Published On :27 ஆகஸ்ட் 2026, 9:47 pm IST
4:17 pm, 27 ஆகஸ்ட் 2026

அடுத்த பிரதமர் யார்? மோடி வரிசையில் முதல்வர் விஜய்! கருத்துக் கணிப்பில் தகவல்!

இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் பதவி வகிக்க வேண்டும் என சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் மூன்றாம் இடம்பிடித்துள்ளார்.

2:57 pm, 27 ஆகஸ்ட் 2026

அமைச்சர்களின் பதிலுரை இல்லாமலேயே நிறைவடைந்த சட்டப்பேரவை!

சட்டப்பேரவையில் இன்று அமைச்சர்களின் பதிலுரை இல்லாமலேயே அவை நிறைவடைந்த நிலையில், நாளைய (ஆக. 28) கூட்டத் தொடரில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதி ஆகிய 3 துறைகளின் அமைச்சர்களும் பதிலுரை வழங்குவார்கள். மேலும், நாளைய கூட்டத்தொடரில் கேள்வி நேரம் இருக்காது.

2:33 pm, 27 ஆகஸ்ட் 2026

உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்

உஸ்பெகிஸ்தான் அதிபர் மிர்ஜியோயேவ் அழைப்பின்பேரில், அந்நாட்டுக்கு ஆக. 29, 30 தேதிகளிலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26-வது வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, ஆக. 31, செப். 1 தேதிகளில் கிர்கிஸ்தான் நாட்டுக்கும் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.

2:37 pm, 27 ஆகஸ்ட் 2026

அடுத்த 72 மணிநேரத்தில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறதா? சீனா எச்சரிக்கை

நேபாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, இயற்கையாக உருவாகியுள்ள ஏரி உடைந்து, மீண்டும் ஒரு வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2:35 pm, 27 ஆகஸ்ட் 2026

நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பு நிவாரணம் வழங்க காங்கிரஸ் வலியுறுத்தல்

நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமருக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

2:35 pm, 27 ஆகஸ்ட் 2026

சிறை, ஹபீபி படங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்குக: சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி கோரிக்கை

சிறை, ஹபீபி திரைப்படங்களுக்கு சிறந்த விருதுகள் வழங்கப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

2:24 pm, 27 ஆகஸ்ட் 2026

இ20 பெட்ரோலால் எகிறும் முட்டை விலை... எத்தனாலுக்கும் முட்டைக்கும் என்ன தொடர்பு?

எத்தனால் கலந்த இ20 பெட்ரோலால் எகிறும் முட்டை விலை மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

11:08 am, 27 ஆகஸ்ட் 2026

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!

11:08 am, 27 ஆகஸ்ட் 2026

இது சட்டமன்றம்; சண்டை மன்றம் இல்லை! பிரேமலதா விஜயகாந்த்

11:08 am, 27 ஆகஸ்ட் 2026

நேபாள வெள்ளம்: பாதுகாப்பாக உள்ள 21 தமிழர்களின் பட்டியல் வெளியீடு!

10:04 am, 27 ஆகஸ்ட் 2026

படம் ஓடாது என அரசு நினைக்கிறது; மக்கள் முதலில் கிளைமேக்ஸை பார்க்கட்டும்! பேரவையில் கலகலப்பு

தமிழக சட்டப்பேரவையில் இனி மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குவதற்கு முன் அமைச்சர்கள் முன்னுரை வாசிக்கும் போதே புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என அவைத் தலைவர் கூறியது குறித்து கலகலப்பான விவாதம் நடைபெற்றது.

8:33 am, 27 ஆகஸ்ட் 2026

நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்ற‌ ஈரோடு தம்பதி! தொடர்புகொள்ள முடியாமல் உறவினர்கள் தவிப்பு!

8:33 am, 27 ஆகஸ்ட் 2026

நேபாளத்தில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்: முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!

8:32 am, 27 ஆகஸ்ட் 2026

நேபாள வெள்ளத்திற்கு இதுதான் காரணம்! அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்

8:32 am, 27 ஆகஸ்ட் 2026

மிகவும் மோசமான பேரிடர்! நேபாளத்தில் பலி 177 ஆக உயர்வு!

6:56 am, 27 ஆகஸ்ட் 2026

சென்னையிலிருந்து நேபாளம் சென்ற 49 பேரின் தகவல் கிடைக்கவில்லை! புதிய தகவல்!

நேபாளத்தில் நேரிட்ட பெரு வெள்ள பேரிடர் சம்பவத்துக்குப் பின், சென்னையிலிருந்து நோபளம் சென்ற 49 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

6:55 am, 27 ஆகஸ்ட் 2026

நேபாள பெரு வெள்ளத்துக்கு முன்பும் பின்பும்! செயற்கைக் கோள் புகைப்படம்

திபெத்தின் எல்லைப் பகுதிக்கு அருகே நேபாளத்தில் போடே கோஷி ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ள சம்பவத்துக்கு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.

6:55 am, 27 ஆகஸ்ட் 2026

நேபாள பெரு வெள்ளம்: 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை காணவில்லை!

6:54 am, 27 ஆகஸ்ட் 2026

செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனா

தமிழக சட்டப்பேரவையில் இன்று பொதுப் பணித்துறை குறித்து பேரவை உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது என்று பதிலளித்துள்ளார்.

4:19 am, 27 ஆகஸ்ட் 2026

ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை!

புதன்கிழமை அரசு விடுமுறை என்பதால் ஒருநாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவை இன்று காலை மீண்டும் கூடியது.

4:19 am, 27 ஆகஸ்ட் 2026

சென்னை ஐஐடி-ல் எஸ்ஆர்எப் பணி: 31-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

4:19 am, 27 ஆகஸ்ட் 2026

தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?

தில்லியின் சத்தர்பூரில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படம் என முதல்வர் ரேகா குப்தா அளித்த வாக்குறுதிகள் செப். 15-க்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சி கெடு நிர்ணயித்துள்ளது.

4:19 am, 27 ஆகஸ்ட் 2026

சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா?

தமிழகத்திலிருந்து கைலாய யாத்திரை சென்று, நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள், ஆகஸ்ட் 1ஆம் தேதியே தங்கள் பயணத்தை திட்டமிட்டிருந்த நிலையில், சீன நாள்காட்டியால் தேதி மாற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.