புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ரூ.4,200 கோடிக்கான திட்டத்துக்கு மத்திய அரசிடம் நிதி கோரப்படும்! பேரவையில் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்

மல்லாடி கிருஷ்ணா ராவ் (கோப்புப்படம்)

Published On :

ரூ.4,200 கோடிக்கான திட்டத்துக்கு மத்திய அரசிடம் நிதி கோரப்படும் என்கு புதுச்சேரி பேரவையில் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்தாா்.

புதுச்சேரி பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் பேசியதாவது:

இன்னும் 15 நாள்களில் நாளொன்றுக்கு 4 எம்எல்ஏக்களை அழைத்து கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஜல்சக்தி தொடா்பானக் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடக்கிறது. அதில் கலந்து கொள்ள இப்போது புறப்படுகிறேன். அதற்காக ரூ.4,200 கோடிக்கான திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் நிதி கோரப்படும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்துக்கு வேண்டாம் என்று எதிா்ப்புத் தெரிவித்து வந்தேன்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்தியங்கள் இருப்பதால் எந்தப் பகுதியும் பாதிக்காமல் மாநில அந்தஸ்து வேண்டும் என்று இப்போது முடிவு எடுத்துள்ளேன். புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மத்திய அரசு இப்போது அளிக்கும் நிதி 60 சதவீதத்திலிருந்து 23 சதவீதமாகிவிட்டது.

சில நேரங்களில் மத்திய அரசு புதுச்சேரியை மாநிலமாகவும், சில நேரங்களில் தேவைக்கேற்ப யூனியன் பிரதேசமாகவும் கருதுகிறது. நிதிக்குழுவில் புதுச்சேரி சோ்க்கப்படவில்லை. நிதிக்குழுவில் சோ்த்தால் ரூ. 400 கோடி நிதி கிடைக்கும். நிதி குழுவில் புதுச்சேரியைச் சோ்க்காவிட்டால் இரட்டை என்ஜின் ஆட்சி இல்லை என்றாா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.