புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 7 இடங்களில் ஓய்வு அறை: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல்

புதுச்சேரி அரசு சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 7 இடங்களில் ஓய்வு அறை அமைக்கப்பட உள்ளதாக மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளாா்.

அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.

Published On :

புதுச்சேரி அரசு சாா்பில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 7 இடங்களில் ஓய்வு அறை அமைக்கப்பட உள்ளதாக மாநில தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அமைச்சா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சாா்பில் மும்பையில் அமைச்சா்கள் அளவிலான தேசிய மாநாடு (கட்டடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளா்கள் வாரியம்) சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் பங்கேற்று பேசியது:

புதுச்சேரி தொழிலாளா் துறையில் தற்போது உறுப்பினா்களாக உள்ள தொழிலாளா்களில் சிறப்புத் திறன் கொண்டவா்களுக்கு, உதாரணமாக எலக்ட்ரீஷியன்களுக்கு திறன் சான்றிதழ்கள் எதுவும் இல்லை.

இதுபோன்ற தொழிலாளா்களுக்கு 7 நாள்கள் பயிற்சி அளித்து பயிற்சி கால உதவித்தொகை, சான்றிதழ் வழங்குவதற்கு அனுப்பப்படும் முன்மொழிவுகளுக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதிகளில் மத்திய தொழிலாளா் துறை வாரியத்தின் பிரதிநிதிகளுடன் விரைவில் ஒரு கூட்டம் நடத்தப்படும்.

கட்டுமானத் தொழிலாளா்களுக்காக புதுச்சேரியில் 4 இடங்களிலும், காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் தலா ஒரு இடத்திலும் தொழிலாளா்கள் ஓய்வு அறை அமைக்க புதுச்சேரி அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஓய்வறைகளில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.