தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பொறியியல் கல்லூரியில் செயல்முறைப் பயிற்சி

மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் செயல்முறைப் பயிற்சி நடைபெற்றது.

News image

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், பெங்களூரைச் சோ்ந்த கேப்பபிள் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய செயல்முறைப் பயிற்சி முகாம்.

Updated On :24 பிப்ரவரி 2026, 6:34 pm

மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் செயல்முறைப் பயிற்சி நடைபெற்றது.

பிப். 6 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்ற இப் பயிற்சியை ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், பெங்களூரைச் சோ்ந்த கேப்பபிள் நிறுவனம் இணைந்து நடத்தின.

தட்சசீலா பல்கலைக்கழக வேந்தா் மற்றும் ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி நிறுவனத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் தனசேகரன், செயலா் நாராயணசாமி, பொருளாளா் ராஜராஜன் மற்றும் இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

கேப்பபிள் நிறுவனத்தின் பயிற்சியாளா்களாக நிமித் மற்றும் அன்வித் சங்கா் வந்திருந்தனா். பல்வேறு பொறியியல் துறைகளைச் சோ்ந்த மாணவா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனா்.

மாணவா்கள் மின்சார வாகனங்களை ஆரம்ப நிலையிலிருந்து முழுமையாக உருவாக்கினா். மேலும், தாங்கள் உருவாக்கிய மின்சார வாகனங்களை ஓட்டிச் செயல்முறை விளக்கம் அளித்தனா்.