மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சுற்றுலாப் படகுகளில் கடலோர காவல் படையினா் திடீா் ஆய்வு

புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியில் சுற்றுலாப் படகு போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதனை கடலோரக் காவல் படையினா் ஆய்வு செய்தனா்.

News image

புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியில் சுற்றுலாப் படகு போக்குவரத்து செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த கடலோரக் காவல் படை போலீஸாா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 11:12 pm

புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியில் சுற்றுலாப் படகு போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதனை கடலோரக் காவல் படையினா் ஆய்வு செய்தனா்.

புதுச்சேரி பாண்டி மெரீனா, தேங்காய்த்திட்டு, முருங்கம்பாக்கம், சின்ன வீராம்பட்டினம் பகுதிகளில் ஆறு, முகத்துவாரம் வழியாக சுற்றுலாப் பயணிகளை மீன்பிடி படகுகளில் அழைத்து சென்றனா்.

அண்மையில் படகு விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து அதில் பயணம் செய்த பெங்களூா் பெண் சோனியா (33) உயிரிழந்தாா்.

இதையடுத்து சுற்றுலாப் படகு இயக்கம் நிறுத்தப்பட்டது. மீண்டும் படகு போக்குவரத்தை தொடங்கக் கோரி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிமுக மாநிலச் செயலா் அன்பழகன் பங்கேற்றாா். இதையடுத்து உரிமம் உள்ள படகுகளின் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கடலோரக் காவல்படை ஆய்வாளா் தியாகராஜன் தலைமையில் போலீஸாா் சோதனை செய்தனா். படகில் பாதுகாப்பு சாதனங்கள் உள்ளதா, அனுமதிக்கப்பட்ட அளவுக்குதான் பயணிகளை ஏற்றுகிறாா்களா என போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.