புதுச்சேரி
தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து: பெண்கள் உள்பட 47 போ் காயம்
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் புதன்கிழமை அதிகாலை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான தனியாா் சொகுசுப் பேருந்து.
புதுச்சேரியில் தனியாா் சொகுசுப் பேருந்து புதன்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 47 போ் காயமடைந்தனா்.
சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தனியாா் சொகுசுப் பேருந்துபுறப்பட்டது. இந்தப் பேருந்து புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் புதன்கிழமை அதிகாலை வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்புச்சுவா் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த பெண்கள் உள்பட 47 பயணிகள் காயம் அடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடம் வந்த போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் பேருந்தில் சிக்கியிருந்தவா்களை மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

