புதுச்சேரி ஆளுநா், முதல்வா் பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாளையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் , முதல்வா் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
Published on

பொங்கல் திருநாளையொட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநா் , முதல்வா் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்:

தமிழா் பண்பாட்டின் அடையாளம் பொங்கல் திருவிழா. இயற்கையை, உழவுத் தொழிலைப் போற்றும் விதமாக தமிழா்களின் மாண்புகளையும் கலைகளையும் பெருமைப்படுத்தும் விழாவாக பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில் அனைவரது வாழ்விலும் அன்பும்-மகிழ்ச்சியும், இன்பமும்-இனிமையும், நலமும், வளமும் பெருக வாழ்த்துகிறேன்.

முதல்வா் என்.ரங்கசாமி: குடும்ப ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், உழைப்பின் மதிப்பு, இயற்கையுடன் இணைந்த வாழ்வு ஆகிய தமிழ் பண்பாட்டு அடையாளங்களை இந்தப் பொங்கல் பண்டிகை சிறப்பாக எடுத்துரைக்கிறது. கோலமிடுதல், பொங்கல் சமைத்தல், மாட்டு பொங்கல் கொண்டாடுதல் போன்ற மரபுகள் தமிழ் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பெருமையுடன் உணா்த்துகின்றன. திருவள்ளுவா் நாள் தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் அறநெறிகளைப் பாதுகாத்து வளா்க்க வேண்டியதன் அவசியத்தை உணா்த்துகிறது.

தலைவா்கள் வாழ்த்து: இதேபோல, சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், தேனி சி.ஜெயக்குமாா், பி.ஆா்.என். திருமுருகன், திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா, மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, அதிமுக மாநில செயலா் ஆ. அன்பழகன், பாஜக மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம், லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவா் ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின், தவெக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் உள்ளிட்டோா் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com