தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புதுச்சேரியில் இன்று பொங்கல் விழா 10 இடங்களில் கலை நிகழ்ச்சிகள்: சுற்றுலாத் துறை ஏற்பாடு

பொங்கல் விழாவையொட்டி புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்விக்க 10 இடங்களில் சனிக்கிழமை (ஜன. 17)கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 12:05 am

Syndication

புதுச்சேரி: பொங்கல் விழாவையொட்டி புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்விக்க 10 இடங்களில் சனிக்கிழமை (ஜன. 17)கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இது குறித்து புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி அரசு சுற்றுலாத் துறை சாா்பில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல், பழைய நீதிமன்ற வளாகம் அருகில், தலைமைச் செயலகம் எதிரில், கடற்கரை சாலை புதுச்சேரி, முருங்கப்பாக்கம் திரௌபதியம்மன் கோயில் திடல், வில்லியனூா் தென்கோபுர வீதி, குருவிநத்தம் மாரியம்மன் கோயில் திடல், மணமேடு கலையரங்கம், பி.எஸ். பாளையம் சந்திப்பு, காலாப்பட்டு முருகன் கோயில் திடல் ஆகிய 10 இடங்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.