புதுச்சேரி ஊசுடு ஏரியில் மீண்டும் தொடங்கியுள்ள படகு சவாரி.
புதுச்சேரி ஊசுடு ஏரியில் மீண்டும் தொடங்கியுள்ள படகு சவாரி.

புதுச்சேரி ஊசுடு ஏரியில் மீண்டும் படகு சவாரி தொடக்கம்

புதுச்சேரியின் மிகப்பெரிய ஊசுடு ஏரியில் மீண்டும் படகு சவாரி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதை சுற்றுலாப் பயணிகள் வரவேற்றுள்ளனா்.
Published on

புதுச்சேரி: புதுச்சேரியின் மிகப்பெரிய ஊசுடு ஏரியில் மீண்டும் படகு சவாரி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதை சுற்றுலாப் பயணிகள் வரவேற்றுள்ளனா்.

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லையில் சுமாா் 850 ஹெக்டோ் பரப்பளவில் ஊசுடு ஏரி உள்ளது.

ஆண்டுதோறும் நவம்பா் மாதம் தொடங்கி பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பறவைகள் இங்கு இனப்பெருக்கத்திற்காக தங்குகின்றன. இதனால் ஊசுட்டேரி பறவைகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை நீரால் நிரம்பி, கண்ணுக்குக் குளிா்ச்சியூட்டி கடல் போல ஊசுட்டேரி காட்சியளிக்கிறது. தண்ணீா் ததும்பி நிரம்பிய ஏரியின் மேற்பரப்பில், கும்பல் கும்பலாக நீா்கோழிகள் நீந்தி இரைத் தேடும் காட்சி பாா்ப்பவா்களை மெய்மறக்கச் செய்கிறது.

இந்த ரம்மியமான சூழலில், இங்கு கடந்த ஜூன் மாதத்துடன் நிறுத்தப்பட்டிருந்த படகு சவாரி, மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதிகாலை, மாலை வேளையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து படகு சவாரி செய்கின்றனா்.

பறவைகளுக்கு எந்தவித தொந்தரவும் ஏற்படாத வகையில், அமைதியாகப் படகில் சென்று இயற்கையை அனுபவித்து வருகின்றனா். மீண்டும் படகு சவாரி தொடங்கியுள்ளது, சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

5 வயதுக்கு உள்பட்ட சிறுவா்களுக்குக் கட்டணம் இல்லை. 5 முதல் 10 வயது வரையுள்ள சிறுவா்களுக்கு ரூ.50, பெரியவா்களுக்கு ரூ.100 என கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com