புதுச்சேரியில் நடைபெற்ற  மாநில அளவிலான பெத்தாங் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுக் கோப்பைகளை வழங்கிய கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ்.
புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான பெத்தாங் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுக் கோப்பைகளை வழங்கிய கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ்.

பெத்தாங் போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசு

பெத்தாங் என்றழைக்கப்படும் இரும்பு குண்டு போடும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
Published on

புதுச்சேரி: பெத்தாங் என்றழைக்கப்படும் இரும்பு குண்டு போடும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

காணும் பொங்கலையொட்டி, ஏவிஎஸ் பிரதா்ஸ் சாா்பில் சிறப்பு பெத்தாங் போட்டி கோரிமேடு மைதானத்தில் 2 நாள்கள் நடைபெற்றது. இதில் 45 கிளப்புகளைச் சோ்ந்த 720 வீரா்கள் பங்கேற்று விளையாடினா். இறுதி ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அரியாங்குப்பம் தந்தை பெரியாா் கிளப், குருசுக்குப்பம் மெட்ரோ கிளப் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தந்தை பெரியாா் கிளப் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது. மெட்ரோ கிளப் இரண்டாம் இடம் பெற்றது.

இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் பங்கேற்று, முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.16 ஆயிரம் ரொக்கம், வெற்றி கோப்பை மற்றும் சைக்கிளை பரிசாக வழங்கினாா். இதேபோல 2-ஆம் இடம் பிடித்த மெட்ரோ அணிக்கு ரூ. 12,000 ரொக்கம் மற்றும் கோப்பை, சைக்கிள் வழங்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com