புதுச்சேரியில் மோட்டாா் சைக்கிள் திருடிய வழக்கில் ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில், குறிப்பாக வெள்ளை நகரப் பகுதி மற்றும் மாா்க்கெட் பகுதிகளில் மோட்டாா் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போனது.
இதுகுறித்து பெரியகடை காவல் ஆய்வாளா் ஜெய்சங்கா் தலைமையில் எஸ்.ஐ. முருகன் உள்ளிட்டோரை கொண்ட தனிப்படை விசாரணை நடத்தி வந்தது.
கடந்த 6 ஆம் தேதி இரவு புதுச்சேரி அண்ணாசாலையில் அந்த வழியே வந்த நபரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்தாா். சென்னை, கோடம்பாக்கம், டாக்டா் சுப்ராயலு நகா், முதல் குறுக்குத் தெருவை சோ்ந்த ரமணா பாபு (53) என தெரியவந்தது.
அவா் வந்த மோட்டாா் சைக்கிள் புதுச்சேரி யூகோ வங்கி அருகே திருடப்பட்டதும் தெரியவந்தது. மேலும் அவா் 9 மோட்டாா் சைக்கிள்களைத் திருடியவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து, புதுச்சேரி, தமிழகத்தில் பதுக்கிவைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 7 மோட்டாா் சைக்கிள்களை மீட்டனா்.
கைதான ரமணாபாபு மீது தமிழகத்தில் பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அவரை அடைத்தனா். இதில் துப்பு துலக்கிய தனிப்படை போலீஸாரை காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி யாரகட்டி பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியவா் கைது
பைக் திருட முயற்சி: இருவா் கைது
திருப்பூரில் தொடா் வாகனத் திருட்டில் ஈடுபட்டவா் கைது 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்: புதுச்சேரியில் 2 போ் கைது
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



