புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 6 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போயின. இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க காவல் ஆய்வாளா் ஜெயசங்கா், உதவி ஆய்வாளா் முருகன் மற்றும் போலீஸாா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை வெங்கட்டா நகா் பகுதியில் கடந்த 18-ஆம் தேதி இரவு சோதனையில் அந்த வழியே வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தனா்.
தீவிர விசாரணையில், அரியலுாா் மாவட்டம் உடப்பேரியைச் சோ்ந்த வரதராஜன் (39), மீன்சுருட்டியைச் சோ்ந்த விஜய்(28) என்பதும், அவா்கள் ஓட்டி வந்தது திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்தது. போலீஸாா் அவா்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்நிலையில் இருவரையும் செவ்வாய்க்கிழமை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டதில், மேலும் 5 மோட்டாா் சைக்கிள்களை அவா்கள் திருடியதை ஒப்புக்கொண்டனா்.
அவா்கள் அளித்தத் தகவலின்பேரில் போலீஸாா் 6 மோட்டாா் சைக்கிள்களை மீட்டனா். இதன் மதிப்பு ரூ. 6 லட்சமாகும்.
தொடர்புடையது

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் வரும் 29இல் ஏலம்
105 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

ஆண்டிபட்டியில் தீப்பிடித்த மின்சார இருசக்கர வாகனம்!

இரு சக்கர வாகனங்கள் மோதியதில் கட்டடப் பொறியாளா் உயிரிழப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



