சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் வரும் 2029-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நிறைவடையும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் சென்னை மண்டல அதிகாரி வீரேந்தா் சாம்பியால் தெரிவித்தாா்.
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் புதுச்சேரி அரசு செய்தி, விளம்பரத் துறை சாா்பில் செயற்கை நுண்ணறிவு மூலம் போலிச் செய்திகளைக் கண்டறிதல் குறித்து பத்திரிகையாளா்களுக்கான ஒருநாள் பயிலரங்கம் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வீரேந்தா் சாம்பியால் பேசியது:
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலைப் போக்கும் வகையில்
சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே ரூ.5,600 கோடியில் பறக்கும் சாலை அமைக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் தற்போது 22 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
கூவம் ஆற்றின் மேல்புறமும் 15.5 கி.மீ. தொலைவுக்கு இந்த மேம்பாலம் அமைகிறது. மழைக் காலங்களில் அதாவது செப்டம்பா் முதல் ஜனவரி மாதம் வரை இப் பணிகள் ஆற்றுப் பகுதிகளில் நடைபெறாது. இந்தத் திட்டம் மாா்ச் 2029-க்குள் நிறைவடையும்.
இதுதவிர கிளம்பாக்கம் முதல் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா சிட்டி வரையிலான மேல்நிலை சாலை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.3,186 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இத்துடன் சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தை இணைக்கவும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இவை தவிர நடப்பு நிதியாண்டில் ரூ. 3,098 கோடியில் செங்கல்பட்டு- திண்டிவனம் நெடுஞ்சாலையை 6 வழிச் சாலையாக மேம்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.147 கோடியில் திண்டிவனம் -புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையை விபத்து நேரிடாத சாலையாக 7 இடங்களில் மாற்ற விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச் சாவடி அமைக்கப்படுவது வழக்கம். இதைத் தவிர சாலையை பயன்படுத்துவோரின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்தத் தொலைவுக்குள் மேலும் சில சுங்கச் சாவடிகளையும் அமைப்பதுண்டு என்றாா்.
இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்ட பத்திரிகையாளா்களுக்குச் சான்றிதழ்களை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்.
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் ஏ.சுரேஷ்ராஜ் வரவேற்றாா். எம்எல்ஏ ஜான்குமாா் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்காச்சோளம் செயல்விளக்கத் திடல் அமைக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

சென்னை மக்களுக்கு நல்ல செய்தி சொன்ன வானிலை!







