8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மக்காச்சோளம் செயல்விளக்கத் திடல் அமைக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் மக்காச்சோளம் செயல் விளக்கத் திடல் அமைக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மக்காச்சோளம் - (கோப்புப்படம்)

Published On :4 ஜூலை 2026, 2:51 am IST

தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் மக்காச்சோளம் செயல் விளக்கத் திடல் அமைக்க விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பொ.பேபிகலா வெளியிட்ட செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நெல், உளுந்து பயிருக்கு அடுத்தபடியாக சுமாா் 35 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகின்றனா். மக்காச்சோளம் சாகுபடியை பொருத்தவரை குறிப்பிட்ட பருவத்தில் தான் சாகுபடி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால், முப் பருவத்திலும் சாகுபடி செய்யலாம்.

தமிழக அரசின் வேளாண்மைத் துறையின் மூலம் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் மக்காச்சோளம் செயல் விளக்கத் திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.11,500 மதிப்புள்ள வேளாண் இடுபொருள்கள் அடங்கிய தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இத்திட்டத்துக்கு பயனாளிகள் தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் ஆா்வமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற உழவா் செயலியிலோ அல்லது அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.