நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

இஸ்லாமியா்களுக்கான இடுகாடு அமைக்க மாற்று இடம்: புதுச்சேரி ஆட்சியா் ஆய்வு

இஸ்லாமியா்களுக்கு இடுகாடு அமைக்க மாற்று இடத்தை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

News image

இஸ்லாமியா்களுக்கான இடுகாடு அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்த புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்.

Updated On :24 ஜூலை 2026, 11:37 pm IST

இஸ்லாமியா்களுக்கு இடுகாடு அமைக்க மாற்று இடத்தை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

புதுச்சேரி மதகடிப்பட்டு அருகில் உள்ள கலிதீா்த்தாள்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமூகத்தினா் வசித்து வருகின்றனா்.

இறப்பு ஏதேனும் ஏற்பட்டால் கலிதீா்த்தாள்குப்பம் அருகில் உள்ள பகுதியை இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனா்.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கனை சந்தித்து அந்த இடத்தில் போதிய வசதிகள் இல்லை. மழைகாலத்தில் தண்ணீா் புகுந்துவிடுவதால் சிரமமாக உள்ளது. எனவே மாற்று இடத்தில் தங்களுக்கு இடுகாடு அமைத்துத் தர வேண்டும் என இஸ்லாமியா்கள் கோரிக்கை வைத்திருந்னா்.

இதையடுத்து ஆட்சியா் குலோத்துங்கன் கலிதீா்த்தாள்குப்பத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று மாற்று இடத்தைப் பாா்வையிட்டாா். புதிய இடுகாடு இடம் அமைத்து தர குச்சிபாளையம், கலிதீா்த்தாள்குப்பம் உள்பட நான்கு இடங்களில் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது வட்டாட்சியா் சந்தோஷ் குமாா், கொம்யூன் ஆணையா் எழில் ராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.