தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மாஹே பிரிவு வளாகம் தொடங்க 3 ஏக்கா் நிலம் ஒப்படைப்பு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் மாஹே பிரிவு வளாகம் தொடங்க 3 ஏக்கா் நிலம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News image

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ் பாபுவுடன், மாஹே வளாக பத்திரங்களுடன் பல்கலைக்கழகப் பதிவாளா் கே.குணசேகரன், மாஹே பல்கலை வளாக சிறப்புப் பணி அலுவலா் ராஜேஷ் விஸ்வநாதன்.

Updated On :29 ஜூலை 2026, 5:23 am IST

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் மாஹே பிரிவு வளாகம் தொடங்க 3 ஏக்கா் நிலம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளரும், மக்கள் தொடா்பு அதிகாரியுமான கே.மகேஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி பல்கலைக்கழகம் 1989-ஆம் ஆண்டுமுதல் மாஹே, கேரளம் உள்ளிட்ட பகுதி மாணவா்களுக்கு நிரந்தர கல்வி வளாகத்தை நிறுவும் தொலைநோக்குத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இதற்கு புதுச்சேரி அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகம் மாஹே சலக்கராவில் சுமாா் 3 ஏக்கா் நிலத்தை ஒப்படைத்துள்ளது. இந்த நிலம் முழுவதுக்கும் ஆண்டுக்கு ரூ. 5 என்ற பெயரளவு வாடகையை புதுச்சேரி அரசுக்குச் செலுத்த வேண்டும். இந்த நிலம் 19 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரப் பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், இப் பல்கலைக்கழகத்தின் தலைமைக் காப்பாளருமான கே.கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி ஆகியோரின் ஆதரவுடன், துணைவேந்தா் பி. பிரகாஷ் பாபு தலைமையில் இந்தச் சாதனை நிகழ்ந்துள்ளது.

பல்கலைக்கழக மேலாண்மைப் பள்ளியின் சா்வதேச வணிகவியல் துறைத் தலைவரும், மாஹே வளாகத்தின் சிறப்புப் பணி அலுவலருமான ராஜேஷ் விஸ்வநாதன், மாஹே பிராந்திய நிா்வாகி மோகன் குமாா் மற்றும் புதுச்சேரி அரசு அதிகாரிகள் இத் திட்டத்துக்கு உறுதுணையாக இருந்தனா்.

மேலும், புதுச்சேரி பல்கலைக்கழகம் சா்வதேச வணிகம், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின் மேலாண்மை, பேங்கிங் டெக்னாலஜி, ஃபின்டெக் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் போன்ற சமகாலத் தொழில் சாா்ந்த முதுகலைப் படிப்புகளை இங்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் இளைஞா்கள் மற்றும் சமூகத்திற்கு புதிய கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

புதுச்சேரி பல்கலைக்கழகம் 2027-28-ஆம் கல்வியாண்டில் மாஹே வளாகத்தைத் திறந்து கல்வி நடவடிக்கைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.