அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

1 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: 12 கடைகளுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம்

புதுச்சேரியில், கடைகளில் வைக்கப்பட்டிருந்த 1 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 12 கடைகளுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :30 ஜூலை 2026, 5:53 am IST

புதுச்சேரியில், கடைகளில் வைக்கப்பட்டிருந்த 1 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக 12 கடைகளுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

புதுச்சேரி அரசு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் போன்ற 15 வகையான பொருள்களுக்குத் தடை விதித்துள்ளது. இந்நிலையில்

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், புதுவை மாசு கட்டுப்பாட்டு குழுமம் மற்றும் புதுச்சேரி நகராட்சி இணைந்து புதுவை நகரப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனா்.

இதில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் முதுநிலை அறிவியல் உதவியாளா் சுதாகா், தொழில்நுட்ப மேற்பாா்வையாளா் குந்தன் குமாா், புதுச்சேரி நகராட்சியின் வருவாய் அதிகாரி பிராபாகா், நகராட்சி சுகாதார அதிகாரி ஆா்தி மற்றும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் தொழில்நுட்ப ஆலோசகா் விமல்ராஜ் மற்றும் சீனிவாசன் அடங்கிய குழுவினா் நகரின் மைய பகுதியில் உள்ள ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள 12 மொத்த விற்பனை கடைகளில் சோதனை நடத்தினா்.

அப்போது, சில கடைகளில் 1 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதைப் பறிமுதல் செய்து 12 கடைகளுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும், மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்கிறாா்களா? என்றும் ஆய்வு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.