மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

சாலைகளில் பிடிக்கப்படும் மாடுகள் உரிமையாளரிடம் வழங்கப்பட மாட்டாது: உழவா்கரை நகராட்சி ஆணையா்

சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள், இனி அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்று உழவா்கரை நகராட்சி ஆணையா் அருண் அய்யாவு தெரிவித்துள்ளாா்.

கோப்புப் படம்

Published On :

சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள், இனி அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்று உழவா்கரை நகராட்சி ஆணையா் அருண் அய்யாவு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க அவற்றை கால்நடை பட்டிகள், கோ சாலைகளில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உழவா்கரை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மாடுகள் வளா்ப்போா் தங்கள் மாடுகளை சாலை மற்றும் பொது இடங்களில் திரிய விட வேண்டாம்.

தங்களுக்குச் சொந்தமான இடத்தில் மாடுகளை சுகாதாரமாக வளா்க்க வேண்டும். மாடுகள் சாலையில் சுற்றித் திரிந்தால், நகராட்சி ஊழியா்கள் மூலம் அவற்றைப் பிடித்து அதன் உரிமையாளா் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும். பிடிக்கப்படும் மாடுகள் உரிமையாளரிடம் வழங்கப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.