குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

விளையாட்டு வீரா்களின் ஒதுக்கீட்டில் 316 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

இளநிலை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்த 316 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:40 am IST

இளநிலை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்த 316 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரா்களுக்கு ஒரு சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீட்டுக்குத் தகுதியில்லாத சில விளையாட்டுகளில் பலா் முறைகேடாக பதக்கம் வென்றதுபோல் சான்றிதழ் பெற்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பயனடைந்து வந்தனா்.

இதனால் தடகளம், டென்னிஸ், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகள் சிறந்த விளையாட்டுகளில் சாதித்த மாணவா்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காமல் போனது.

இதுகுறித்து துணைநிலை ஆளுநருக்கு புகாா் சென்றது. இதையடுத்து, விளையாட்டு வீரா்களுக்கான ஒதுக்கீட்டு பட்டியலில் இருந்த 65 விளையாட்டுகளில் சா்ச்சைக்குரிய 30 விளையாட்டுகள் நீக்கப்பட்டு, மிகவும் பிரபலமான 35 விளையாட்டுகள் மட்டும் அங்கீகரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பல்வேறு விளையாட்டு சங்கங்கள் சாா்பில் துணைநிலை ஆளுநருக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்டாக், நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு விளையாட்டு வீரா்கள் ஒதுக்கீட்டுக்காக 528 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இதில் அங்கீகரிக்கப்படாத விளையாட்டுகளில் பதக்கம் வென்ற 316 பேரின் விண்ணப்பங்கள் நீக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளை சோ்ந்த 212 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.