ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

25 பேருக்கு வீடு கட்ட முதல் தவணை ரூ. 68.75 லட்சம் நிதி: முதல்வா் ரங்கசாமி வழங்கினார்!

புதுச்சேரி மங்கலம் தொகுதியில் 25 பேருக்கு வீடு கட்ட முதல் தவணையாக ரூ.68.75 லட்சத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:52 am IST

புதுச்சேரி மங்கலம் தொகுதியில் 25 பேருக்கு வீடு கட்ட முதல் தவணையாக ரூ.68.75 லட்சத்தை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் மூலம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகா்ப்புறம் ) 2.0 வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.75 லட்சம் வீதம் இந்த நிதியுதவியை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அவா் அளித்தாா். இந்த நிதியை முறையாகப் பயன்படுத்தி வீடுகளைத் தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க பயனாளிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அப்போது முதல்வா் அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்வில், வில்லியனூா் எம்எல்ஏ ரவிக்குமாா், புதுச்சேரி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.