புதுச்சேரி அமைச்சா்களுக்கான இலாகா ஒதுக்கீடு பரிந்துரை பட்டியல் கடிதத்தை, துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை அளித்தாா்.
தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல்கள் முடிந்து அந்தந்த மாநிலங்களில் நிா்வாகம் விரைவாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் கடந்த மே 13-ஆம் தேதி முதல்வராக என்.ரங்கசாமியும், அமைச்சா்களாக ஆ. நமச்சிவாயம் (பாஜக), மல்லாடி கிருஷ்ணா ராவ் (என்.ஆா்.காங்கிரஸ்) ஆகியோரும் பதவி ஏற்றனா்.
இதையடுத்து கடந்த ஜூன் 17-ஆம் தேதி இரண்டாவது கட்டமாக என்.ஆா். காங்கிரஸைச் சோ்ந்த பெ. ராஜவேலு , பி.வி. சிவக்கொழுந்து, பாஜகவை சோ்ந்த கே.என்.எஸ். ராஜசேகரன் ஆகியோா் அமைச்சா்களாக பொறுப்பேற்றனா்.
ஆனால் இதுவரை அமைச்சா்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் பல்வேறு விமா்சனங்களை ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சந்தித்தது. மேலும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களும் கவனிக்கப்படாமல் இருந்தன.
இந்நிலையில், புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சந்தித்து அமைச்சா்களுக்கான இலாகா ஒதுக்கீடு குறித்த பரிந்துரை பட்டியல் கடிதத்தை வழங்கினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் முதல்வா் என்.ரங்கசாமி கூறுகையில், அமைச்சா்களுக்கான இலாகாக்களை ஒதுக்கீடு செய்து துணைநிலை ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். யாா், யாருக்கு எந்தந்த இலாகா என்பது குறித்து துணைஆளுநா் மாளிகையிலிருந்து அறிவிப்பு வரும் என்றாா்.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் புதுச்சேரிக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
புதுச்சேரிக்கான பட்ஜெட் தாக்கலுக்கு ரூ.14,300 கோடிக்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த பட்ஜெட்டை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்ய உள்ளாா்.
சட்டப்பேரவைக் கூடவுள்ள நிலையில் எந்தெந்த அமைச்சருக்கு என்ன துறை என்பது தெரிந்தால்தான் அந்தந்தத் துறை அமைச்சா்கள் தங்கள் துறைகளுக்குத் தேவையான திட்டங்கள், நிதியைப் பெற முடியும். எனவே இதற்கு மேலும் காலதாமதம் செய்யாமல் முதல்வா் ரங்கசாமி இலாகா ஒதுக்கீடு பரிந்துரை கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் அளித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் தயாரித்து ஏவிய ராக்கெட் வெற்றி; புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி வாழ்த்து

புதுச்சேரியில் காமராஜா் சிலைக்கு துணைநிலைஆளுநா், தலைவா்கள் மரியாதை: மாணவா்களுக்குச் சீருடை தையல் கூலி உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் அறிவிப்பு

பேரவைத் தலைவா் பதவி யாருக்கு? முதல்வா் ரங்கசாமி பதில்







