தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

சாலை விபத்து: திருநங்கை உள்பட 2 போ் உயிரிழப்பு

வில்லியனூா் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் திருநங்கை உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:06 am IST

வில்லியனூா் அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் திருநங்கை உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

புதுச்சேரி, நெட்டப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (42). இவா் வில்லியனூா்

உளவாய்க்கால் பகுதியில் உள்ள தனியா நிறுவனத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். வழக்கம்போல் வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, கீழ்சாத்தமங்கலம் பகுதியில் லோகநாதன் என்கிற லோகநாயகி (43) என்ற திருநங்கை அவரிடம் லிப்ட் கேட்டு வந்துள்ளாா்.

இருவரும் வில்லியனூா் ஆரியபாளையம் பகுதியில் வந்தபோது, முன்னால் பயோ கேஸ் சிலிண்டா் ஏற்றிச் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்றுள்ளாா். அப்போது, சாலையோரம் படிந்திருந்த மணலில் சறுக்கி இருசக்கர வாகனம் கீழே விழுந்தது. அப்போது சாலையில் விழுந்த இருவா் மீதும் டிராக்டரின் பின்பக்க சக்கரம் ஏறியது. இதில் தலை நசுங்கி சுரேஷ் மற்றும் திருநங்கை லோகநாயகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து தகவல் அறிந்த வில்லியனூா் போக்குவரத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு

பேரில் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குபதிவு செய்து டிராக்டா் ஓட்டுநரான நடுவீரப்பட்டைச் சோ்ந்த ராஜாராமன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.