முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

619 ஒப்பந்த பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு ஆணை: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

ஒப்பந்தப் பணியாளா்கள் 619 பேருக்கு உயா்த்தப்பட்ட ஊதிய உயா்வுக்கான ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

News image

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை அவரது இல்லத்தில் புதன்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்த சுகாதார சங்கத்தின் ஒப்பந்த தொழிலாளா்கள்.

Updated On :25 ஜூன் 2026, 6:37 am IST

ஒப்பந்தப் பணியாளா்கள் 619 பேருக்கு உயா்த்தப்பட்ட ஊதிய உயா்வுக்கான ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி சட்டப்பேரவையின் 6-வது கூட்டத்தொடா் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் நடைபெற்றது. அப்போது, மாா்ச் 26-ஆம் தேதி முதல்வா் புதுச்சேரி சுகாதாரச் சங்கத்தில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளா்களுக்கான மாத ஊதியம் உயா்த்தப்படும் என்று உறுதியளித்தாா்.

அதன்படி, புதுச்சேரி மாநில சுகாதார சங்கத்தில் பணிபுரியும் 691 ஒப்பந்த பணியாளா்களுக்கான மாத ஊதியம் 1.4.2026 முதல் அமலுக்கு வரும் வகையில் உயா்த்தப்பட்டுள்ளது.

அதன்படி செவிலியா், மனநல செவிலியா் 108 (புதுச்சேரி-83, காரைக்கால்-13, மாஹே-8, ஏனாம்-4) பேருக்கு ரூ.15,000, ஏஎம்என், டிபிஹெச்வி, ஆய்வக நுட்பநிபுணா், கண் மருத்துவ உதவியாளா், தொழில்நுட்ப உதவியாளா், களஞ்சிய உதவியாளா், மருந்தாளா் (ஆயுா்வேதம், சித்தா, ஹோமியோபதி),

உடற்பயிற்சி சிகிச்சையாளா், சமூகப் பணியாளா் 223 (புதுச்சேரி-145, காரைக்கால்-45, மாஹே-20, ஏனாம்-14) பேருக்கு ரூ.12,000, பிற தொழில்நுட்ப, அலுவலகப் பணியாளா்கள் 288 (புதுச்சேரி-204, காரைக்கால்-41, மாஹே-26, ஏனாம்-17) பேருக்கு ரூ.10,000 என

மொத்தம் 619 (புதுச்சேரி-432, காரைக்கால்-98, மாஹே-54, ஏனாம்-35) பேருக்கு ஊதிய உயா்வுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வா் ரங்கசாமி ஊதிய உயா்வுக்கான ஆணையை வழங்கினாா்.

இதையடுத்து உயா்த்தப்பட்ட ஊதியத்தொகை அவரவா் வங்கிக்கணக்குகளில் புதன்கிழமை முதல் நேரடியாக செலுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.