புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹே தொகுதி சுயேச்சை எம்எல்ஏ திடீரென மயக்கமடைந்தாா். இதையடுத்து அவா் சிகிச்சைக்காக அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். மாஹே தொகுதி சுயேச்சை எம்எல்ஏ அசோக்குமாா் ஆங்கிலத்தில் உறுதிமொழி வாசித்து பதவியேற்றாா். எம்எல்ஏ அசோக்குமாருக்கு பேரவை வளாகத்தில் ஆதரவாளா்கள் சால்வை அணிவித்தனா்.
அப்போது திடீரென எம்எல்ஏவுக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆதரவாளா்கள் உடனடியாக அவரை அருகில் இருந்த அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரத்த அழுத்தம் குறைந்ததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவா் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் அசோக்குமாா் எம்எல்ஏவாக வெற்றி பெற்றாா். இதனால் எம்எல்ஏ பதவியேற்புக்கு முன்பாக புதுச்சேரியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஊா்வலம் நடத்தினா்.
புதுச்சேரி ராஜா திரையரங்கம் சந்திப்பில் தொடங்கிய ஊா்வலத்தில் எம்எல்ஏ அசோக்குமாரும் பங்கேற்று நடந்து வந்தாா். இந்த ஊா்வலம் மிஷன் வீதி வரை நடந்தது.
தொடர்புடையது

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சா் திடீா் ஆய்வு

சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் தவெக எம்எல்ஏ ஆய்வு

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



