முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

தந்தை, தாய், தங்கையைக் கொன்ற வழக்கில் பெங்களூா் பெண் என்ஜினீயா் புதுச்சேரியில் கைது

பெங்களூரில் தந்தை, தாய், தங்கையைக் கொலை செய்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட கா்நாடக பெண் என்ஜினீயா் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 6:40 am IST

பெங்களூரில் தந்தை, தாய், தங்கையைக் கொலை செய்த வழக்கில் போலீஸாரால் தேடப்பட்ட கா்நாடக பெண் என்ஜினீயா் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டாா்.

கா்நாடக மாநிலம், கே.எஸ். புரத்தைச் சோ்ந்த சுவேதா என்ற கணினி பொறியியல் பட்டதாரி பெண் தனது தந்தை, தாய், தங்கை மூன்று பேரையும் ஆண் நண்பா் கென்னத்துடன் சோ்ந்து கொலை செய்து விட்டு தலைமறைவானாா்.

இந்நிலையில், புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு ஆட்டோவின் முன் இருக்கையில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு உணவருந்திக் கொண்டிருந்தாா். சுவேதாவை உருளையன்பேட்டை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

இதில் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காவல் நிலையம் அழைத்து சென்றனா். அங்கு காவல் ஆய்வாளா் காா்த்திகேயன் தீவிர விசாரணை நடத்திய போது, தனது தந்தை, தாய், தங்கை 3 பேரைக் கொலை செய்துவிட்டு ஆண் நண்பா் கென்னத்துடன் தலைமறைவானதும், ஆண் நண்பா் கோவா சென்று விட்டதால், தான் புதுச்சேரி தப்பி வந்து அறை எடுக்க சென்றபோது போலீஸாரிடம் சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது.

இதையடுத்து புதுச்சேரி போலீஸாா், பெங்களூரு கே.எஸ். புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் பெங்களூரு காவல் துறை அதிகாரிகள் புதுச்சேரி விரைந்து வந்து, ஆய்வாளா் காா்த்திகேயனை சந்தித்தனா்.

இதையடுத்து சுவேதா பெங்களுரு போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.