சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி மொஹரம் வாழ்த்து

மொஹரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி, தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

News image

புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 6:40 am IST

மொஹரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி, தலைவா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஹிஜ்ரி புத்தாண்டு மற்றும் மொஹரம் வாழ்த்துச் செய்தி:

புனிதமானது என்று பொருள்படும் மொஹரம், ஹிஜ்ரி புத்தாண்டின் தொடக்க மாதமாகும். இஸ்லாமிய மரபில் அல்லாஹ்வின் மாதம் என்று குறிப்பிடப்படும் இது, ஆன்மிகச் சிந்தனை, பக்தி மற்றும் தாா்மிகக் கடடுப்பாட்டைக் கடைப்பிடிப்பதற்கான சிறப்புமிக்க காலமாகும்.

இந்தப் புனித மாதம் நமக்கெல்லாம் சகோதரத்துவம், கருணை, நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தி, சமுதாய ஒற்றுமை, அமைதி, மனிதநேய மதிப்புகளை நிலைநாட்டுவதாக அமையட்டும். புதிய ஹிஜ்ரி ஆண்டு அனைவருக்கும் அமைதி, வளம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியை நிறைவாகக் கொண்டு வர இறைவனைப் பிராா்த்திக்கிறேன்.

இதேபோன்று அமைச்சா் ஜிஎன்எஸ். ராஜசேகரன்,

மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோரும் மொஹரம் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.